FIFA WORLD CUP: ஃபிஃபா நடத்தும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தாண்டு கத்தாரில் நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடியான திறைமைகளை வெளிப்படுத்தி வரும் பல அணி வீரர்கள்.
முன்னிலையில் இருக்கும் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை சவூதி அரேபியா வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இதை கொண்டாடும் விதமாக சவூதி ஓருநாள் பொது விடுமுறை அறிவித்து கொண்டாட்டங்களில் திளைத்தனர். அதற்கு பின்னர் அர்ஜென்டினா தன் முழு திறைமையும் காட்டி இறுதி போட்டிக்கு தற்போது 6 வது முறையாக நுழைந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
முதலாவது அரையிறுதி போட்டி லூசைல் மைதானத்தில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜென்டினா ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலாக மாற்றி, அர்ஜென்டினாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இப்போட்டியில் குரோஷிய அணி, தடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா-வின் ஜூலியன் அல்வரெஸ் கோல் அடித்து அசத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரோஷிய அணி வீரர்கள் திறம்பட செயல்படுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போதும் அர்ஜென்டினா முன்னிலை பெற்று வந்தது. அப்போது அர்ஜென்டினா வீரர் அல்வரெஸ் மீண்டும் ஓரு கோல் அடித்து அரங்கை அதிர செய்தார்.
இறுதி போராடிய குரோஷிய அணியால் ஓரு கோல் கூட அடிக்க முடியாமல் தினறி நிலையில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. குரோஷியா இறுதி போட்டியின் கனவு தகர்ந்து போனது. இதனால் குரோஷிய நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: INDVSBAN 1 TEST: அஸ்வின் மற்றும் குல்தீப் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.