உதயநிதி: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி தலைமையில் பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர்கள் அருள்பதி, கிருஷ்ணா ரெட்டி, துணை தலைவர் ராமகிருஷ்ணன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், சேம்பர் பில்டிங் கமிட்டி சேர்மனுமான கல்யாணம் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து அவர் அமைச்சராக பதவி ஏற்றதற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிலிம் சேம்பர் வளாகத்தில் இரண்டாவது பிளாக் கட்ட அனுமதி வாங்கிக் கொடுத்ததற்காகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அடுத்து கட்ட இருக்கும் மூன்றாவது பிளாக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 10 ஆயிரம் சதுர அடி இடம் வழங்குவதை உறுதிப்படுத்தியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.