பட்டத்து அரசன் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0
10

பட்டத்து அரசன் திரைப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஓன்றாக விளங்கும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார்.

அதர்வா சில தேர்ந்தெடுத்த கதைகளிலேயே நடித்து சீரான பெயரினை பெற்று வருகிறார். முக்கியமாக பெண் ரசிகர்கள் அவரின் நடிப்பை மிகவும் விரும்புகின்றனர். இவரது பல படங்கள் வெற்றி பெற்றாலும் சில படங்களால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நல்ல கதை அம்சம் கொண்ட படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நடிகர் அதர்வா இருக்கின்றார்.

பட்டத்து அரசன் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கன்னட மாநிலத்தை சார்ந்த பெங்களூர் நடிகையான ஆஷிகா ரங்கநாத் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதல் முறையாக அறிமுகமாகிறார். மேலும், ராஜ்கிரண், ராதிகா சரத்குமார்  போன்ற பலர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை களவாணி, வாகை சூடவா படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு லைகா நிறுவனம் தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓளிப்பதிவு லோகநாதன் செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

விரைவில் திரையரங்குகளுக்கு வெளியாக உள்ளதை அடுத்து இப்பத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு. டான், பன்னிக்குட்டி, பொன்னியின் செல்வன் திரைப்படங்களை வெளியிட்ட லைகா நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பு பணிகளை மேற் கொண்டு வருவது சிறப்புக்குரியது.

இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here