பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகை ஐஸ்வர்யா ராயின் முதல் மோஷன் படத்தை வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள்.
கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். இந்நாவலைத் தழுவி ஓரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று வெகுகாலமாக நினைத்தார் இயக்குனர் மணிரத்னம். அதன்படி பொன்னியன் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார். முதல் படத்திற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வனின் முதல் பாகம் இவ்வாண்டு செப்டம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், கார்த்திக், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஐஸ்வர்யாராயும் இயக்குனர் மணிரத்னமும் இப்படத்தின் மூலம் 4 வது முறையாக இணைந்து உள்ளனர். இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாலம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரமின் கதாபாத்திரத்தை புதிய போஸ்டர் மூலம் அறிமுகம் செய்துள்ளனர். அந்த போஸ்டரில் போர்களத்தில் ஆதித்ய கரிகாலனான விக்ரம், குதிரை மீது அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராயின் முதல் மோஷன் பிச்சரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் பிறந்தநாளன்று பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. பின் ஓவ்வொரு போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ்த் திரையுலகில் இயக்குனர் மணிரத்தனம் தனக்கென தனி பானியில் இறங்கி சிறப்பான படங்களை தருபவர். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் என்றால் அது மிகையாகாது. இப்படம் ஓரு பான் இந்தியா படமாக எதிர்பார்க்கப்படுகிறது.