இரண்டாம எலிசபெத்: இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 96. 70 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கிலாந்தின் ராணியாக இருந்து அவர் சரித்திரம் படைத்தார். அவரது மறைவுக்கு பின் அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராணி எலிசபெத்தின் உடலுக்கு பொது மக்களும், உலக தலைவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் ராணியின் உடலுக்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ராணியின் கணவர் பிலிப்பின் உடலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இது ராணியின் கடைசி ஆசையாகும்.
இந்நிலையில் ராணியின் உடல் புதைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. ராணியின் கல்லறை மன்னர் நான்காம் ஜாரஜ் நினைவு பேராலாயத்தில் அமைந்துள்ளது. கல்லறை முழுவதும் பளபளப்பான பெல்ஜிய கல்லால் கட்டப்பட்டுள்ளது. மேலும் கல்லறையின் கல்லில் இங்கிலாந்து ராணியின் பெயர், அவரது கணவர் பிலிப் மற்றும் ராணியின் பெற்றோர் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது. ராணியின் தந்தையான 6ம் மன்னர் ஜார்ஜின் கல்லறையும் இதே இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.