தனுஷ் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் இவரின் குரல் வலிமையால் பல சிறந்த பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது, விடுதலை படத்தின் பாடலை பாடிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
வடசென்னை, அசுரன் போன்ற சிறந்த படங்களை வழங்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் கதாநாகனாக சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ளனர். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரிக்கு இப்படம் டர்னிங் பாயிண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது.
நகைச்சுவையை விடுத்து கதாநாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார் சூரி. இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடமே இணைவார். இப்படத்தில் முதன் முறையாக இசைஞானி இளையராஜாவை களமிறக்கி உள்ளார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் மீத பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஓரு பகுதியாக படத்தின் முதல் சிங்கில் பாடலை இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் குரலில் ‘ஓன்னோடு நடந்தா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
முதன் முறையாக இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். இதற்காக அவர் முன்னதாகவே இளையராஜாவிடம் பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் முழுப்பணிகளும் முடிக்கும் தருவாயில் மார்ச் மாதம் வெளியடப்படும் என்றும் படக்குழு கூறியுள்ளது.
இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் சூரிக்கும் அவருடைய காதலிக்கும் வரும் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுகா எழுதிய வரிகள் இளையராஜாவின் இசையுடன் சேர்ந்து ரம்மியமாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: சூர்யா 42 படத்திற்காக 50 ஸ்டென்ட் கலைஞர்களுடன் மெனக்கடும் சூர்யா
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.