செஸ் ஓலிம்பியாட் 2022 44வது போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
இந்தியா 2வது அணியில் விளையாடிய சத்வாணி ரவுனக், ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். சத்வாணி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று கோலாகலமாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி பின் இன்று காலை அண்ணா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விமானம் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சென்றார்.
இப்போட்டியிலிருந்து வெளியேறுவதாக பாகிஸ்தான் அணியினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவில் உள்ள அணியினர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளியேறியதன் மூலம், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உறுதி செய்யப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை ஓபன் பிரிவில் 187 ஆகவும், பெண்கள் பிரிவில் 161 ஆகவும் குறைந்துள்ளது.
இந்திய அணியை சமன் செய்ய மூன்றாவது அணியை களமிறக்க அனுமதித்தது. பொதுவாக, ஒரு செஸ் ஒலிம்பியாட் நடத்தும் நாடு இரண்டு பிரிவுகளிலும் இரண்டு அணிகளை களமிறக்க முடியும்.
இப்படி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் செஸ் ஓலிம்பியாடில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.