சீனாவின் வர்த்தக நகரத்தில் இயங்கி வந்த ஜம்போ மிதக்கும் ஹோட்டல் கடலில் மூழ்கியது

0
6

சீனாவின் வர்த்தக நகரத்தில் இயங்கி வந்த ஜம்போ மிதக்கும் ஹோட்டல் கடலில் மூழ்கியது என தகவல்கள் வந்துள்ளது. சீனாவின் வர்த்தக நகரமான ஹாங்காங்கில் உள்ள புகழ்பெற்ற மிதக்கும் ஹோட்டல் தென்சீனக் கடலில் மூழ்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் ஐம்பது ஆண்டு காலமாக இயங்கி வந்த மிதக்கும் ஜம்போ உணவகம் சீன மக்களின் கலாச்சாற்த்தைப் பறைசாற்றுவனவாக இருந்து வந்தது. இதன் அமைப்பு சீன அரண்மனையை ஓத்து காணப்பட்டது.

ஜம்போ மிதவை ஹோட்டல் கொரோனா காலத்தில் கடும் நதி நெருக்கடியில் தவித்து வந்தது. பலநாட்களாக கோவிட் 19 கட்டுப்பாட்டுக் காரணமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஜம்போ மிதவை ஹோட்டலை பராமரிக்கக் கூட நிதி இல்லாததால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது.

சீனாவின் வர்த்தக நகரத்தில் இயங்கி வந்த மிதக்கும் ஹோட்டல் கடலில் மூழ்கியது

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது.

டாம் குரூஸ் மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணி போன்ற உலக பிரபலங்களும் இதில் தங்கி உணவருந்தியுள்ளனர். சுற்றுலா பயணிகள் பெரும்பாலனவர்களை கவர்ந்ததாக இருந்த ஜம்போ மிதவை உணவகம்.

ஜம்போ மிதவை ஹோட்டலும் கொரோனா காலத்தில் கடும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது. உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேலை இழந்தனர். பராமரிப்பு செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது ஜம்போ மிதவை கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here