அதிக டீ குடிப்பது ஆயுளை அதிகரிக்கிறது பிரிட்டன் ஆய்வில் தகவல்

0
16

அதிக டீ குடிப்பது ஆயுளை அதிகரிக்கிறது பிரிட்டன் ஆய்வில் தகவல். அதாவது தினமும் இரண்டு அல்லது 2 டீக்கு மேல் குடிப்பவர்கள் டீ குடிக்காதவர்களை காட்டிலும் அதிக நாட்கள் ஆயுள் கொண்டவர்களாக இருப்பதாக பிரிட்டன் தேசிய புற்றுநோய் ஆய்வு தகவல் அறிவுறுத்துகிறது.

அதிக டீ குடிப்பவர்களுக்கு இதயம் தொடர்பான எந்த ஓரு நோய்களும் வருவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. நம்மில் பலர் தினமும் காலை எழுந்தவுடன் ஓரு கப் பாலினால் கலந்த டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக உள்ளது. அது அவர்களுக்கு ஓரு புத்துணர்ச்சியை தருவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆய்வின்படி பாலினால் தயாரிக்கப்படும் டீ அல்லது காபியை வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோகியத்திற்கு ஆபத்து என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் பால் மற்றும் சர்க்கரை  இல்லாமல் தயாரிக்கப்படும் பிளாக் டீயை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதாக குறிப்பிடப்படுகிறது.

ப்ளாக் டீ மற்ற தேயிலைகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில், கமெலியா அகாசியா என்ற தாவரம் ப்ளாக் டீ தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த தேயிலைகள் இதய ஆரோக்கியம் , தோல் மற்றும் முடி தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும், சரி செய்யும் என்று கூறப்படுகிறது.

அதிக டீ குடிப்பது ஆயுளை அதிகரிக்கிறது பிரிட்டன் ஆய்வில் தகவல்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பிளாக் டீ:

ஸ்டைல்கிரேஸின் கூற்றுப்படி, ப்ளாக் டீ குடிப்பதன் மூலம் இதயம் தொடர்பான ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. ப்ளாக் டீ-யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் பண்புகள் இதயத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது. இதனால் இதயத்தைச் சுற்றியுள்ள தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. தினமும் மூன்று கப் ப்ளாக் டீ குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

இதையும் அறிந்து கொள்க: முடக்கத்தான் கீரையில் உள்ள நன்மைகள் மற்றும் தோசை செய்யும் முறைகள்

நீங்கள் தினமும் பால், டீ, காபி குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். தினமும் காலை மாலை நீங்கள் விரும்பும் மற்ற நேரங்களிலும் பிளாக் டீயை அருந்துங்கள் மூன்று டீ வரை அருந்துவது நன்மை அதற்குமேல் அருந்துவது தவறு ஏனெனில் ”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இல்லையா? பிளாக் டீ அருந்துங்கள் அதன் நன்மையை உணர்வீர்கள்.

பிளாக் டீயின் நன்மைகள்:

  • ப்ளாக் டீ சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
  • ப்ளாக் டீ குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • தொடர்ந்து பிளாக் டீ குடிப்பதால் எலும்புகள் வலுவடையும்.
  • ப்ளாக் டீ செரிமானத்திற்கும் நன்மை பயக்கும்.
  • ப்ளாக் டீ உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
  • ப்ளாக் டீ சருமத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும்.
  • இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிந்து பாதுகாக்கலாம்.

எனவே, பிளாக் டீயை குடித்து பிரிட்டன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆய்வின்படி ஆரோக்கியத்தையும் இதயத்தையும் பாதுகாக்க பிளாக் டீ பருகுவதை வாடிக்கை ஆக்குங்கள் பயன்களை பெறுங்கள் நண்பர்களே.

இது போன்ற உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், கடி ஜோக்ஸ், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தில் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here