கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு உலகம் கொண்டாடும் கால்பந்து ஆட்டத்தின் கடவுளாக பார்க்கப்படும் மெஸ்ஸி. இவரின் வருவாய் மற்றும் சொத்து மதிப்பை இப்பதிவில் அறியலாம்.
இதுவரை தெரியாதவர்களுக்கும் மெஸ்ஸி என்றால் யார் என்பதும் இவரின் சாதனையையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சாதனைகளை பதிவு செய்துள்ளார். இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவிற்கு தான் அடித்த கோல் மூலம் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் திருப்பி பார்க்க வைத்துள்ளார்.
மெஸ்ஸியின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை:
லியோனர் மெஸ்ஸி அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில் 1987 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் 5 வயது குழந்தை பருவத்தில் இருந்தே கால்பந்து விளையாடத் தொடங்கினார். சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதில் ஆர்வத்துடன் இருந்த மெஸ்ஸிக்கு, அவரின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தான் முதல் பயிற்சியாளராக விளங்கினார். தனது 9 வயதிலேயே பல வெற்றிகளை குவித்த மெஸ்ஸி, தொடர்ந்து கால்பந்து உலகில் தன்னை ஒரு சிறந்த வீரராக நிலை நிறுத்திக் கொண்டார்.

மெஸ்ஸியின் குடும்ப வாழ்க்கை:
இவருக்கு ஜூன் 30, 2017 அன்று திருமணம் நடைபெற்றது. அவரின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸ்ஸோ ஆவார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர். அன்டோனெல்லாவும் மாடல் அழகியாவார். இவர் தனியாக சில தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்:
10 லா லிகா கோப்பைகள், 4 சாம்பின்ஸ் லீக் கோப்பைகள், 3 கிளப் உலக கோப்பைகள், 2022ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியிலும் இவரின் அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.
மாரடோனா வாரிசு:
1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டனாக மாரடோனா இருந்து அந்த அணிக்கு உலக கோப்பை பெற்று தந்தார். இதன் பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்துள்ளார் மெஸ்ஸி.
கால்பந்துக் கடவுள் எனப் புகழப்படும் மாரடோனா, கால்பந்து விளையாட்டில் எனது வாரிசு என்று புகழும் வீரரானார் மெஸ்ஸி. அதனை தற்போது பிபா உலக கோப்பையில் நிரூபித்தும் காட்டியுள்ளார் மெஸ்ஸி.
மெஸ்ஸியின் சிறப்புகள்:
- இதுவரை அதிக உலக கோப்பையில் விளையாடிய நபராக மெஸ்ஸி இருந்து வருகிறார்.
- நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியுடன் இது 26வது போட்டியாகும் மெஸ்ஸிக்கு.
- ஒவ்வொரு நாக்வுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றுள்ளார்.
மெஸ்ஸியின் சொத்து மதிப்பு:
உலகிலேயே அதிக வருவாய் பெறும் விளையாட்டு வீரர்களில் முதன்மையானவராக மெஸ்ஸி இருந்து வருகிறார். இவரின் வருமானம் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் 75 மில்லியன் டாலர் வருமானம் என்பது விளையாட்டுகள் மூலமாகவும், 55 மில்லியன் டாலர் விளையாட்டு அல்லாத வருமானமாகவும் காணப்படுகிறது. உலகின் முதல் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியிலில் டாப் 5லியே இடம் பெற்றுள்ளார்.
மெஸ்ஸியின் நிகர மதிப்பு 620 மில்லியன் டாலர்களாகும் (இந்திய மதிப்பில் ரூ.5000 கோடிக்கு மேல்). இது அவரை உலகின் மிகப்பெரிய பணக்கார கால்பந்தாட்ட வீரராக மாற்றியது. அர்ஜென்டினாவின் தொழில்முறை கால்பந்து வீரர் ஆன மெஸ்ஸி, ஸ்பானிஷ் கிளப் பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகிய இரண்டிற்கும் கேப்டனாக உள்ளார்.
மெஸ்ஸி பதிவு செய்யும் ஓரு பதிவுக்கு இன்ஸ்டா மூலம் 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுமார் 40.5 மில்லியன் ரசிகர்கள் அவரைப் பின்தொடர்வது அவருக்கு இந்த தொகை கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மே முதல் 2022 ஆம் ஆண்டு மே வரை மெஸ்ஸியின் வருமானம் மற்றும் சுமார் 1000 கோடி என்று கூறப்படுகிறது. மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர்கள் என்றும் இன்னும் அவரது சொத்து மதிப்பு மிக அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரம்
அர்ஜென்டினா இதுவரை உலக கோப்பையை மூன்று முறை பெற்றுள்ளது. 1976, 1986 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டும் என மூன்று முறை பெற்றுள்ளது. உலக கோப்பையை வென்ற கேப்டன்களில் பெயர்களில் இவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரின் வாழ்கையில் பல தோல்விகளையும் கடும் விமர்சனங்களையும் பெற்றுள்ளார். இருப்பினும் தனது தன்நம்பிக்கை மூலம் விமர்சித்த அனைவரது வாய்களுக்கும் பூட்டு போட்டுள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.