அமெரிக்காவில் இளைஞனாக மாற ஆண்டுக்கு 16 கோடி செலவிடும் 45 வயது தொழிலதிபர்

0
9

அமெரிக்கா. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் ஒரு பயோெடக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் பிரையன் ஜான்சன். இவர் தன் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். தற்போது 45 வயதாகும் பிரையன் ஜான்சனுக்கு 18 வயது இளைஞனாக தோற்றம் தர வேண்டும் என்று ஆசை.

இதற்காக தனது பங்களாவிலேயே ஒரு குட்டி மருத்துவ ஆய்வகமாக மாற்றி உள்ளார். 30 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தன் உடல் பராமரிப்பிற்காக பிரையன் பணி அமர்த்தியுள்ளார். அந்த குழுவினர் பிரையனின் உடலை தினமும் சோதித்து அவரின் உடல் உறுப்புகளை இளைஞரின் உடல் உறுப்புகளை போல் மாற்றும் வழிமுறைகளை செய்து வருகின்றனர்.

45 years america buisness man spend 16 crores yearly in his youngness

அதன்படி 18 வயதுடைய இளைஞனின் நுரையீரல், உடல் தகுதி, 28 வயது இளைஞனுக்குரிய தோல் தோற்றம், 37 வயது இளைஞனின் இதய செயல்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரையன் கூறியுள்ளார். இதேபோல் தனது பல், கல்லீரல், சிறுநீரகங்கள், தசை நாண் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் 18 வயது இளைஞனின் உடல் உறுப்புகளைப் போல மாற்றும் முயற்சியில் பிரையன் ஜான்சன் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ஆண்டுக்கு ரூ.16 கோடியை செலவிடுகிறார் பிரையன் ஜான்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here