இலவசங்களால் நாடு ஓரு புள்ளி அங்குலம் கூட வளராது-சீமான்

0
21

இலவசங்களால் நாடு ஓரு புள்ளி அங்குலம் கூட வளராது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இலவசங்கள் என்பது ஓரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஓரு புள்ளி அங்குலம் கூட வளராது என்றும் சீமான் பேசியுள்ளார்.

இலவசங்கள் பற்றி ஓரு பெரிய விவாதமே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியும் இலவசங்கள் அளிப்பதை தடுக்க வேண்டும் என்றும் இலவசங்களால் நாட்டில் வரி செலுத்துவோரின் மீது தான் சுமை அதிகரிக்கப்படுவதாகவும் இதனால் பெரும் பிரச்சனை எழுகிறது என்றும் கூறியதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் நேரங்களில் இலவசங்கள் அளிப்பதாக கூறுவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இலவசங்களால் நாடு ஓரு புள்ளி அங்குலம் கூட வளராது-சீமான்

இலவசங்கள் தரக்கூடாது என வழக்கும் பாஜக சார்பில் தொடுக்கப்பட்டது. நீதிமன்றமோ இலவசங்கள் அளிக்க கூடாது என தீர்ப்பு வழங்க முடியாது இலவசங்களால் ஏழை எளிய மக்கள் எங்கோ ஓருவர் பயன் அடைந்து வருகிறார். அதனால் அதனை இலவசங்கள் அளிக்க கூடாது என்று கூற முடியாது என தீர்ப்ப அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுக்கும் அறிவிப்புகளை ஓழுங்கு படுத்துவது நாட்டின் கடமை என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் இலவசங்கள் பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் இதனை பற்றி ஓரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதனை சுட்டு காட்டியே நாம் தமிழர் கட்சி தலைவர் ஓருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here