பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவியில் ஓளிப்பரப்படும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஓன்று பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை முடித்து ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக இந்தி தொலைக்காட்சி தொடரில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 16 வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் ஓளிப்பரப்பாகும் பிக்பாஸ் தொடரை ஆரம்பம் முதலே நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வருகிறார்.
இந்த சீசனில் முதல் 20 பேரை ஹஸ்மெட்டாக அனுப்பினர். தொடர்ந்து அடுத்த வாரமே ஓயில்டு கார்டு போட்டியாளராக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். ஓவ்வொரு வாரமும் ரசிகர்களின் ஓட்டு விகிதங்களின் அடிப்படையில் ஓருவர் எலிமினேட் ஆவார். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

அசல் கோலார், மெட்டி ஓலி சாந்தி, ஷெரினா, நிவாஷா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் என தொடர்ந்து ரசிகர்களால் குறைந்த வாக்குகளை பெற்றவர்கள் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்த நிலையில் இந்த வார நாமினேட் லிஸ்ட் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் முகத்தில் கேக் கிரீமை பூச வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். இதையடுத்து ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். அதன்படி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா, குயின்சி, மைனா, கதிரவன், ஜனனி, ஷிவின், தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் சீசன் 6: வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் சம்பளம் இவளவா?
இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதை ஓட்டி ஹஸ்மெட்டுகளுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.