அரையிறுதியில் மோதவுள்ள பலம் வாய்ந்த நான்கு அணிகள் முழு விவரம்

0
4

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் அரையிறுதிக்கு பலம் வாய்ந்த நீயூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட அணிகள் அனைத்தும் தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இருப்பினும் அரையிறுதிக்கு நான்கு அணிகள் மட்டுமே அதிக புள்ளி பட்டியலின் அடிப்படையில் தேர்வாகி உள்ளது.

குரூப் ஏ பிரிவில் நீயூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளது. அதே போல குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து சாதனை சூர்யகுமார் யாதவ்

அரையிறுதியில் மோதவுள்ள பலம் வாய்ந்த நான்கு அணிகள் முழு விவரம்

முதற்கட்டமாக நவம்பர் 9ம் தேதியில் சிட்னி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நீயூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன. இந்த மைதானம் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் வல்லூனர்கள் கருத்துகின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றோரு போட்டியானது நவம்பர் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலைட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த நான்கு அணிகளும் தகுந்த பலத்துடன் இருப்பதால் யார் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதி போட்டிகள் நவம்பர் 13ம் தேதி மெல்பர்னில் நடக்க இருக்கின்றது. இதில் பங்கு பெற்று டி20 உலக கோப்பை 2022 க்கான கோப்பையை எந்த அணி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நடப்பு போட்டிகளை நடத்தும் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாத நிலை அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலக கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா வெளியேறி ரிசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது போன்ற பல விளையாட்டு தகவல்கள் மற்றும் அனைத்து வித தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here