IPL மினி ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது இதில் பல முன்னணி வீரர்களுக்கு அதிக அளவில் போட்டிகள் நிலவி வந்தது. இதில் சென்னை அணி எத்தனை வீரர்களை எடுத்துள்ளது எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது குறித்த முழுத் தகவல்களை இப்பதிவில் அறியலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆரம்பம் முதலே சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த தொடரில் தோனிக்கு பதிலாக ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். தொடர் தோல்விகளை தழுவி வந்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் கேப்டன் பதவியை நிராகாரித்தார்.
இந்த நிலையில், சென்னை அணியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்து வந்த ஆல்ரவுன்டர் ஜடேஜாவை தோனி சமாதானம் செய்து சென்னை அணியிலியே அவரை தொடர வைத்துள்ளார்.

தற்போது, நடைபெற்று வந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 7 வீரர்களை நிர்வாகம் வாங்கியுள்ளது. அதில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டவர்களில் முதன்மையானவராக இருப்பவர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இவரை 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது. அவருக்கு இப்போது 31 வயதாகிறது. இவர் இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் அணியில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். அதனால் இவரை இந்த தொகைக்கு வாங்கியது தகும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்ததாக, நியூசிலாந்து அணியின் கெயில் ஜெமிசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் ஆல்ரவுண்டராக செயல்படுபவர். இவருக்கு 27 வயதாகிறது.
நிஷாந்த் சிந்து – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது. இவரை ரூ. 60 லட்சத்திற்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. அஜிங்யா ரஹானே – பேட்ஸ் மேன். 34 வயதாகும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ரூ. 50 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஷேக் ரஷித் – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார். அஜய் மண்டல் – ஆல் ரவுண்டர்.வயது 26. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார். இவர்களை தொடர்ந்து பகத் வர்மா – ஆல் ரவுண்டர். வயது 24. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் தந்திரம்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.