ஜி.வி.பிரகாஷ்: பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் நடிக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து 5 பாடல் காட்சிகளை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு திரையிட்டு காட்டினார் இயக்குனர் தங்கர் பச்சான். அந்த பாடல்களை பார்த்து வியப்படைந்த ஜி.வி.பிரகாஷ்குமார் கூறுகையில்,
‘தங்கர் பச்சான் இயக்கிய ‘அழகி’ படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். அப்போது எனது பயணத்தில் இது போன்ற ஒரு யதார்த்தமான வாழ்வியல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். இன்று ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் மூலம் அந்த ஏக்கம் நிறைவேறியுள்ளது.
மனம் வருடும் பாடல்களும், காட்சிப் படிமங்களும் என் படைப்பின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் எண்ணங்களை ஈடுசெய்யும் என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறினார். இப்படத்தில் தங்கர் பச்சான், வைரமுத்து, ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணி சேர்ந்து 5 பாடல்கள் உருவாகியுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடிவடைந்ததும் விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.