தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் உகர்ந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது சிறப்பு மிகுந்தது.
பக்தர்கள் இவ்விழாவிற்காக ஆறு நாட்கள் விருதம் இருந்து தினமும் முருகனை நினைத்து காலையில் சுத்தமாக குளித்து முருகனை வழிப்பட்டு ஓரு வேலை உணவு அருந்தாமல் கந்தர் அனுபூதி, கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகனின் திருவருள் பாடலைகளை பாடி மகிழ்வர். ஓருசிலர் பல மயில் தூரம் இந்த பாதயாத்திரையாக சென்று தாம் விரும்பும் அறுபடை முருகன் கோவில்களில் ஏதாவது ஓன்றில் முருகனை வழிப்பட்டு தன் வேண்டுதலை வேண்டி வழிபாடு செய்வர்.
பாத யாத்திரை செல்பவர்கள் வெகு தூரத்தில் உள்ள முருகன் தலத்திற்கு செல்வதற்காக கந்தசஷ்டி முதல் நாளிலிருந்தே நடை பயணத்தை தொடர்வர். முருகன் தலத்திற்கு சென்று நேர்த்திக் கடன்களையும் செய்து வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். இந்த கந்தசஷ்டியில் விரதமிருந்து முருகப் பெருமானை விழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், வணிகம் தொடர்பான சிக்கல்கள் தீரும் என்றும், நாம் எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும் என்றும் பக்தர்களின் நம்பிக்கை.

உலகெங்கிலும் உள்ள முருகன் கோவில்களிலும் இவ்விழா வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. இரண்டாம் படை விடான திருஆலவாய் என்று சொல்லக்கூடிய திருச்செந்தூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.
முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹார விழா இங்கு பெருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம் இதை காண பல லட்சம் பக்தர்கள் இங்கு வருவார்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறை தகுந்த பாதுகாப்பை தரக் காத்திருக்கின்றனர்.
இதுபோல, முருகனின் அறுப்படை வீடுகளிலும் சிறப்பான முறையில் கந்தசஷ்டி விழா மிக சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது.