கவதம் காம்பீர்: 2022 டி20 உலககோப்பை தொடரிலிருந்து அரையிறுதியோடு வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2013 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 9 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் கைப்பற்றவில்லை. இந்நிலையில் அரையிறுதிக்கு பின்னர் இந்திய அணி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் காம்பீர் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒரு நாள் உலகக்கோப்பையின் வெற்றிகளில் தான் ஒரு அங்கமாக இருந்ததை நினைவு கூர்ந்து கேப்டன் தோனியை பாராட்டி பேசியுள்ளார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தோனியோடு ஒப்பிட்டு பேசியிருக்கும் அவர், ‘யாராவது வந்து ரோகித் சர்மாவை விட அதிக இரட்டை சதங்களும், விராட் கோலியை விட அதிக சதங்களும் அடிப்பார்கள், ஆனால் எந்த இந்திய கேப்டனும் மூன்று ஐசிசி கோப்பைகளை அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய கேப்டனாக முதல் முயற்சியிலேயே டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது மற்றும் ஒரு நாள் உலககோப்பை வென்றது என இந்திய வரலாற்றில் கேப்டனாக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றவர் என்ற பெருமையை தோனி தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் டி20 உலக கோப்பையில் 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2011 ஒருநாள் உலககோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும் மற்றும் 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் வீழ்த்தி 3 ஐசிசி கோப்பையை வென்ற சாதனையை தோனி தன்வசப்படுத்தினார்.