பழனி மலை முருகன் கோயிலில் குவியும் சினிமா பிரபலங்கள்

0
27

பழனி மலை: பழனி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்களை தமிழில் ஓதி கும்பாபிஷேகம் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து பழனிமலை முருகனை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களும் பெருமளவில் பழனி மலை கோயிலுக்கு வந்து சாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர். சமீபத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் அமலா பால், சமந்தா ஆகியாேர் சாமியை தரிசிக்க பழனி மலை முருகன் கோயிலுக்கு வந்தனர்.

gautham karthik and manjima mohan special dharsan at palani malai murugan temple

மயோசிடிஸ் எனும் தசை அழற்ஜி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா ஆளே மாறிவிட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி வரும் சமந்தா சில நாட்களுக்கு முன்பு பழனி மலை முருகனை 600 படிகள் ஏறி நடந்து சென்று தரிசித்தார். மேலும் அவர் ஒவ்வொரு படிக்கட்டிலும் சூடம் ஏற்றி வழிபட்டுக் கொண்டே தனது வேண்டுதலை நிறைவேற்றினார். மேலும் அவர் அங்குள்ளவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் நடிகை அமலா பாலும் தனது தோழிகளுடன் பழனி மலை முருகனை தரிசனம் செய்தார். தற்போது புதுமண தம்பதிகளான கவுதம் கார்த்திக்கும் அவரது மனைவி மஞ்சிமா மோகனும் பழனி மலை முருகன் காேயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here