கௌதம் கார்த்தி மஞ்சுமா, சித்தார்த் அதிதி இவர்களின் காதலை சமூக வலைத்தளங்கள் வழியாக உறுதிப்படுத்தினர்.
தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் மற்றும் சித்தார்த் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள். இந்த நிலையில், கௌதம் கார்த்தி கடல் படத்தின் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்தி கதாநாயகனாகவும் மஞ்சுமா மோகன் நாயகியாகவும் இந்த படத்தில் அறிமுகமாகினர். இப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது இருந்தும் இதை யாரும் தெரிவிக்காமல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் ஓருவரை ஓருவர் காதலிப்பதை உணர்ந்து தங்கள் காதலை பகிர்ந்து கொண்டு தற்போது சமூக வலைதளத்தின் வழியாக தங்கள் காதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மஞ்சுமா மோகனுடன் இருக்கும் புகைப்படங்களை தன் இன்சாட ஐடி மூலம் அறிமுகம் செய்து காதலிப்பதை உறுதி செய்து கொண்டார் கௌதம் கார்த்தி. தமிழில் மஞ்சுமா மோகன் அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் ஷங்கர் இயக்கிய பாஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி பல எண்ணற்ற படங்களில் நடித்து வருபவர். சமூக பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுப்பவராகவும் இவரை பார்க்க முடிந்தது. சமீப காலமாக நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் சித்தார்த் காதலில் இருப்பதாக தகவல் பரவியது. இருவரும் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே பங்கேற்றனர்.
இந்த நிலையில் அதிதிராவ் ஹைதரி பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து காதலிப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.
சித்தார்த் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”என் இதய ராஜகுமாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இருவரும் மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதிதிராவ் ஹைதரி தமிழில் செக்கசிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
இரு சினிமா பிரபலங்கள் தங்கள் காதலை தெரிவித்துருப்பது கோலிவுட்டில் ஆராவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.