கெளதம் மேனன்: ‘கெளதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்துக்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பான் இந்தியா படம் ஒன்றை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் பாணியில் க்ரைம் த்ரில்லராக இதை உருவாக்க உள்ளாராம்.
இதில் விஜய் சேதுபதி சிபிஜ அதிகாரியாகவும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் கொலைகாரனகாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கெளதம் மேனன் இரு தரப்பிலும் பேசி வருகிறாராம். அவரது படங்கள் தொடர் தோல்வியடைந்ததால் அவர் இயக்கும் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே கெளதம் மேனன் படத்துக்கு ஒருவேளை தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் இந்த படம் உருவாகும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.