இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் – தமிழ் நடிகர்களில் யார் டாப்?

0
24

கூகுள் தேடல்: 2022ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட ஆசியாவை சேர்ந்த முதல் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் யார், யார் எந்த இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் கூகுள் வெளியிட்டுள்ள ஆசியாவை சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தியா மற்றும் தென்கொரியாவை சேர்ந்த பிரபலங்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் கொரியாவில் BTS எனும் பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பாடகரான ‘வி’ முதலிடத்திலும், அதே குழுவைச் சேர்ந்த ஜங்க்கூக் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கோலிவுட்டை பொறுத்தவரை தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜய் 15வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்துதான் தமிழின் மற்ற நடிகர்கள் உள்ளனர். நடிகர் சூர்யா 45வது இடத்திலும், தனுஷ் 46வது இடத்திலும் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 68வது இடத்திலும், அஜித்குமார் 78வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் நடிகர்களை காட்டிலும் நடிகைகளே முன்னணியில் உள்ளனர்.

இந்திய நடிகைகளில் காஜல் அகர்வால் 13வது இடத்திலும், சமந்தா 17வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 22வது இடத்திலும், தமன்னா 31வது இடத்திலும், நயன்தாரா 33வது இடத்திலும் உள்ளனர். தென்னிந்தியாவிலேயே காஜல் மற்றும் விஜய்தான் டாப்பில் உள்ளனர்.

இதேபோல் கிரிக்கெட் வீரர்களில் விராட்கோலி 3வது இடத்திலும், தோனி 24வது இடத்திலும், ரோஹித் சர்மா 32வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 51வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 58வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 67வது இடத்திலும், கே எல் ராகுல் 71வது இடத்திலும், பாபர் அசாம் 81வது இடத்திலும் உள்ளனர்.

google's top100 most searched asian celebreties:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here