விருதுநகரில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது

0
39

விருதுநகரில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார்.

திமுக முப்பெரும் விழா – ஏற்பாடுகள் தீவிரம் விருதுநகரில் இன்று மாலை தி.மு.க.-வின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுகவின் சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா 15ஆம் தேதி மாலை விருதுநகரில் நடைபெறுகிறது.

அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

விருதுநகர் பட்டம்புதூர் அண்ணாநகரில் அமைந்து உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிலான கலைஞர் திடலில் வருகிற 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.

விருதுநகரில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது

விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு பிரதான முகப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரின் உருவப்படங்களுடன் மலை முகடு போன்று அமைக்கப்படுகிறது. விழா பந்தல் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்படுகிறது. பிரமாண்ட பந்தலில் 60 ஆயிரம் பேர் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் அரசு பள்ளிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் காலை சிற்றுண்டி திட்டத்தை குழந்தைகளுடன் அம்ர்ந்து உணவை உண்டும் உணவை ஊட்டியும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து விருதுநகரில் புதிய கலெக்டர் கட்டித்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதற்குபின் விருதுநகரில் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here