சிவகார்த்திகேயன்: கிரேன் வடிவிலான மோகோபாட் கேமரா இந்தி படங்களில் சமீபகாலமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரிஸ்க்கான ஆக்ஷ்ன் காட்சிகளை படமாக்குவதில் இந்த வகை கேமரா பெரும் உதவியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசன் நடித்த விக்ரம், அஜித் நடித்த துணிவு படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகளை இந்த கேமரா மூலம் துள்ளியமாக படமாக்கியுள்ளனர்.
இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். தற்போது அவர் இய்ககும் ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘விருமன்’ படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ‘மாவீரன்’ அதிதிக்கு இரண்டாவது படமாகும். இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரிதா நடிக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் வடிவமைத்து வருகிறார்கள். அதற்காக இதில் ‘மோகோபாட் கேமரா’ பயன்படுத்தப்பட்டு வருகிறது.