ஜிஆர்டி: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக மிகச்சிறந்த கலைநயத்துடன் நகைகளை வடிவமைத்து, விற்பனை செய்து பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. தற்போது இன்னொரு மைல் கல்லாக சிறந்த பிரேஸ்லெட் வடிவமைப்பிற்கான ஐஜே விருதை ஜிஆர்டி நிறுவனம் பெற்றுள்ளது.
ஐஜேவின் 12வது விருதுக்காக அகில இந்திய அளவில் 21 நகரங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. இதில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அழகிய பிரேஸ்லெட் வடிவமைப்பிற்காக சிறந்த கைவினைத்திறன் மற்றும் வடிவமைப்பிற்கான விருதை வென்றது.
இந்த சாதனை குறித்து ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் அனந்த் பத்மநாபன் கூறுகையில், ‘ஜிஆர்டி துவக்கத்தில் இருந்து கைவினைத்திறன் மற்றும் விலை மதிப்பற்ற வடிவமைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது சிறந்த பிரேஸ்லெட் வடிவமைப்பிற்கு கிடைத்த ஐஜே விருது நிறுவனத்தின் உழைப்பிற்கு கிடைத்த பலன் ஆகும்’ என்றார்.
ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘இந்த விருது பாதுகாக்கப்பட வேண்டிய கைவினை பொருட்களுக்கான உண்மையான மதிப்பை காட்டுகிறது. மிக பெரிய சாதனை விருதை பெற்றதற்காக நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.