குஜராத்: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார்

0
4

குஜராத்: குஜராத் ராம்நகர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் போட்டியில் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும் சிறந்த திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருபவர். காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டியில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

பின்னர், சிறிது நாட்கள் செல்வே உடல்நிலை சரியாகி உடற்பயிற்சி செய்வது போலவும் பாடல்களை கேட்டுக் கொண்டே ஓர்க் அவுட் செய்வது போலவும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் வாழும் பகுதி மக்களுக்கு உதவிகளையும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.

குஜராத்: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார்

தனது மகளின் பிறந்தநாளுக்கு ஏழை மக்களின் குழந்தைகளுக்கு உதவியதை பதிவிட்டு இருந்தார். இவர் கிரிக்கெட்டில் நல்ல மக்கள் செல்வாக்கை பெற்றவர் மூன்று விதமான போட்டிகளிலும் சராசரியாக விளையாடி பெயர் பெற்றவர். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக கடந்த வருடம் கேப்டனாக நியமிக்கப்பட்டவர்.

சிஎஸ்கே அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் சிறந்த விளையாட்டு திறமையை வெளி கொணர்ந்வர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளை கொண்டது. இந்த மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க குஜராத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகின்றது. பா.ஜ.க கோட்டையாகவும் இருந்து வருகின்றது. இதனால் வேட்பாளர்களை சரியாக தேர்ந்தெடுக்கும் பணியை சிறப்பாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது, கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here