குஜராத் தேர்தல்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா முதன் முறையாக சட்டப் பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறங்கி ஜாம்நகர் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்க உள்ளார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என் கணவர் ரவீந்திர ஜடேஜா தான் என்று அவர் பெருமையாக கூறினார்.
குஜராத் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டப் பேரவையாகும். இந்த சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைப் பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று மிகுந்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. ஆரம்பம் முதலே பாஜக முதன்மை பெற்று வந்தது.
குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா 159 தொகுதிகளை கைப்பற்றி 7 வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா களமிறங்கினார். அம்மாநிலத்தின் ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ரிவாபா ஜடேஜாவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனபா ஜடேஜாவை காங்கிரஸ் தனது வேட்பாளராக களமிறக்கியது.

ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நேருக்கு நேர் மோதியதால் ஜாம்நகர் வடக்கு தொகுதி முடிவுகளை பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். குறிப்பாக தனது மனைவிக்காக தீவிர தேர்தல் பரப்புரையில் ரவீந்திர ஜடேஜா ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வந்த ஜடேஜா மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தார்.
இதையும் படியுங்கள்: தேசிய கட்சி அந்தஸ்த்தைப் பெற்ற அரவிந்த் கெஜிரிவாலின் ஆம் ஆத்மி
இந்நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ரிவபா ஜடேஜா வெற்றி பெற்றதை அடுத்து ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா சட்டப்பேரவைக்குள் நுழையவுள்ளார். இவரை எதிர்த்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனாபா ஆம் ஆத்மி வேட்பாளரை விட குறைவான வாக்குகளே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.