ஆஸ்கருக்கு இந்தியாவின் சார்பில் Chhello Show என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், RRR மற்றும் த காஷ்மீர் பைல்ஸ் என்ற தேர்வாகும் என எதிபார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் படங்களின் சார்பில் குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த அறிவிப்பை இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா நேற்று அறிவித்திருந்தார்.

இதில், தமிழ், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, ஹிமாசா (அசாம்) மொழிகளில் இருந்து தலா ஒரு படம், இந்தியில் 6 பாடங்கள், தெலுங்கில் 2 படங்கள் என மொத்தம் 13 படங்கள் கலந்துகொண்டன. இறுதியில் குஜராத்தி படமான ‘செலோ ஷோ’ (கடைசி காட்சி) தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்தப் படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதை பான் நலின்இயக்கியுள்ளார். பாவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா உட்பட பலர் நடித்துள்ளனர். சினிமாவை பற்றிய திரைப்படம் இது. இதுபற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் ரவி கொட்டாரக்கரா கூறும்போது, ‘அனைத்து குழுவினரும் ஒருமித்து தேர்வு செய்த படம் இது. இந்த படம், இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது. தமிழில் இருந்து ‘இரவின் நிழல்’ படம் இடம் பெற்றிருந்தது’ என்றார்.
கடந்த ஆண்டு, திரைப்படத் தயாரிப்பாளர் வினோத்ராஜ் பிஎஸ் இயக்கிய கூழாங்கல் (கூழாங்கற்கள்) தமிழ் நாடகம், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.