TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

0
5

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு நடத்தும் தேர்வு மூலமே தகுதி செய்யப்படுகிறது. ஓவ்வொரு பணிக்கும் தகுந்தார் போல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என பிரிக்கப்பட்டு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் குரூப் 2 க்கான தேர்வு நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான தேர்வு ஜூலை 24 ம் தேதி நடைப்பெற உள்ளது. அத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியாகி உள்ளது. இணையத்தளம் மூலம் அதனை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வுக்காக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

1.  www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. ”ஆன்லைன் சேவை”என்பதை கிளிக் செய்ய வேண்டும்

3. ”ஹால் டிக்கெட் பதிவிறக்கம்” என்பதை கிளிக் செய்யவும்

4:  பின்னர் வலதுப்பக்த்தில் கொடுக்கப்பட்டுள்ள ”Download Hall Ticket” என்பதைக் கிளிக் செய்யவும்.

5. ‘TNPSC குரூப் 4 தேர்வு’ இணைப்பை கிளிக் செய்யவும்

6.  உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here