ஓடிடி தளம்: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா மோத்வானி. பல்வேறு மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். குஷ்பூ போன்ற தோற்றத்தில் இருப்பதால் இவர் ‘குட்டி குஷ்பூ’ என்றும் அழைக்கப்பட்டார். ஹன்சிகா கடந்த டிசம்பர் 4ம் தேதி மும்பை தொழிலதிபரும், தனது நீண்ட நாள் காதலருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஹன்சிகா தனது திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு விற்று விட்டதாக தகவல்கள் பரவின.
அது உண்மைதான் என்பது போல் ஹன்சிகா தனது திருமண வீடிேயாவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு விற்று விட்டார். அந்த வீடியோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் வெளியிடுவதாக இருந்த நிலையில் நாளை இந்த வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தற்போது வெளியான டிரைலரில் கலகலப்பான நடனம் மற்றும் ஆட்டம் பாட்டம் இடம் பெற்றுள்ளது. இதற்காக ஹன்சிகா மோத்வானிக்கு பல கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.