ஹன்சிகா: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தமிழின் முன்னணி ஹீரோக்களான விஜய், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால் உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை குஷ்பு போல் பப்லியாக இருப்பதால் இவரை சின்ன குஷ்பு என்றும் அழைத்தனர். தமிழில் தொடரந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு கடந்த ஓரிரு வருடங்களாக படங்கள் எதுவும் இல்லை. அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.
இந்நிலையில் அவர் விவாகரத்தான தனது தோழியின் கணவர் சோஹேல் கதுரியாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா அறிவித்திருந்தார். இப்போது ‘காந்தாரி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவைப் போல ஹன்சிகாவும் தனது திருமண வீடியோக்களை ஓடிடி நிறுவனத்துக்கு விற்றுள்ளார். அதன்படி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் தனது திருமண விழா நிகழ்ச்சிகளை ரூ. 15 கோடிக்கு விற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.