ஹன்சிகா நடித்துள்ள ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது

0
4

ஹன்சிகா: ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் 4ம் தேதி தனது நண்பரும், நீண்ட நாள் காதலருமான மும்பை தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே ஹன்சிகாவின் தோழியை மணந்து விவாகரத்து பெற்றவர். இவர்களது திருமண வீடியோ நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. திருமணத்திற்கு பின்பும் தான் தொடர்ந்து நடிக்கப் போவதாக ஹன்சிகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தற்போது அவர் ராஜூ துசா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’. இப்படம் சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ருத்ரன்ஸ் செலுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும். அதாவது 105 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை ஒரே ஷாட்டில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவங்கைளக் கொண்டு படமாக்கியுள்ளனர். இது சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

hanshika's one not five minute is a single shot movie with single character

கிஷோர் பாய்டாபு ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. சில படங்கள் சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டாலும் அதன் கதை பல கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும். ஆனால் ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ படத்தின் கதை ஒரு கேரக்டரை மட்டுமே மையப்படுத்தி நடக்கிறது. படம் ஓடும் நேரமும், கதை நடந்து முடியும் நேரமும் ஒன்றாகவே இருக்கும். கிரீன்மேட் ஷாட்டுகள் பயன்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here