தனது சம்பளத்தை விவசாயிகளின் கல்வி நலனுக்கு வழங்கும் கிரிக்கெட் வீரா்

0
9

ஹர்பஜன் சிங் தனது ராஜ்ய சபா சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை நாட்டின் நல‍னுக்காக தான் செய்யும் அர்பணிப்பு என்று கூறியுள்ளார். ஆம் ஆத்மி சார்பாக ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்நதெடுக்கப்பட்டவர்.

ஹர்பஜன் சிங் போன வருடம் (2021) டிசம்பர் மாதம் தான் தனது அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். விளையாட்டு மட்டுமின்றி சினிமாவிலும் காலுன்றி நடித்தார். தமிழக மக்களின் அன்பை உடையவர். இந்திய அணிக்க‍கவும் விளைய‍டி அனைவரின் அன்பையும் பெற்றவர். தமிழில் பேசவும் தமிழ் பாடலுக்கு ஆடியும் CSK விற்கு IPL ல் சென்னை அணிக்காக விளையாடியும் தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

தனது சம்பளத்தை விவசாயிகளின் கல்வி நலனுக்கு வழங்கும் கிரிக்கெட் வீரா்
தனது சம்பளத்தை விவசாயிகளின் கல்வி நலனுக்கு வழங்கும் கிரிக்கெட் வீரா்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், தனது ராஜ்யசபா சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக பங்களிப்பதாக தெரிவித்துள்ளார்.  “ராஜ்யசபா உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது ராஜ்யசபா சம்பளத்தை வழங்க விரும்புகிறேன்.  நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்,” என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். நேர்மையாக நிறைவேற்றும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விளையாட்டை ஊக்குவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜ்யசபா தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி ஐந்து வேட்பாளர்களை பரிந்துரைத்தது. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here