ஹர்த்திக் பாண்டியாவால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

0
19

ஹர்த்திக் பாண்டியாவால் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கிலும் ஜெலித்தார் பாண்டியா.

ASIA CUP 2022: ஆசிய கோப்பைக்கான தொடரின் முதல் ஆட்டம் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2018 க்கு பிறகு இந்தாண்டு நடத்தப்படுகிறது. முதல் ஆட்டமே மிக விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது. காரணம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் கடந்த இந்திய அணியுடன் மோதிய போட்டியில் வென்று கோப்பையைப் பெற்றது. அதனை சமன் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இந்திய அணியினருக்கு இருந்தது. அதனாலும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ரன்கள் அடிக்க தடுமாறி வந்தனர்.

ஹர்த்திக் பாண்டியாவால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

ரிஸ்வானும், இஃப்திகார் அகமதும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். இருப்பினும் ஹர்திக் பாண்டியா வீசிய ஷாட் பந்தில் இருவரும் ஆட்டமிழந்தனர். இதனால் 97 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டை பாகிஸ்தான் தடுமாறியது. இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆசிஃப் அலி 9 ரன்களில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் எடுத்தது. தஹானி 2 சிக்சர் விளாச, அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல் கோல்டன் டக் ஆனார்.

கோலி 35 ரன்களும் ஜடேஜா 34 ரன்களும் இறுதியாக சொல்லி அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்த ஆட்டத்தில் பாண்டியா பவுலிங்கில் 3 விக்கெட்டும், பேட்டிங்கில் 33 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here