காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண்

0
5

காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண் இதன் மூலம் டிவிட்டரில் தனது திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண். அவர் 2010-ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் அறிமுகமானார். இதற்கிடையே ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார் ஹரீஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து வில் அம்பு, பொறியாளன், அரிது அரிது போன்ற படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் திடீர் என வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சி இவரது சினிமா வாழ்க்கையையே புரட்டி போட்டது. ரசிகர்களின் ஆதரவோடு… 100 நாட்கள் உள்ளே இருந்த ஹரீஷ் கல்யாண் பைனல் வரை சென்று இரண்டாவது ரன்னர் அப்பாக வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை வந்து விட்டு வெளியே வந்ததும், பிக்பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘பியர் பிரேமா காதல்’ திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின்னர் கவனிக்கப்பட கூடிய நடிகராக மாறிய ஹரீஷ் கல்யாண்… தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான, ‘இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

சமூக வலைத்தளத்தில் காதலியின் கையுடன் கை கோர்த்தபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, ஒரு புதிய துவக்கம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here