நா.முத்துக்குமார் எழுதிய இந்த வரிகளுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது-ஹாரிஸ் ஜெயராஜ்

0
6

நா.முத்துக்குமார் எழுதிய சாமி படப் பாடலில் இந்த வரிகளுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது என ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு செய்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு நடிகர் சீயான் விக்ரம் படத்தின் சூப்பர் ஹீட் படமான சாமி படம் செம மாஸான படமாக பார்க்கப்பட்டு வசூலிலும் கள்ளாக்கட்டியது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல் மிக பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய படமாகவும் அந்நாளில் பார்க்கப்பட்டது. மேலும் படத்திற்கு பெரிய பலமாக விவேக் செம காமெடி செய்து மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்திருப்பார். இதில் வரும் அனைத்து காட்சிகளும் ரசிக்கும் வண்ணம் படக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்.

நா.முத்துக்குமார் எழுதிய இந்த வரிகளுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது-ஹாரிஸ் ஜெயராஜ்

இப்படத்தில் இடப்பெற்ற “ஒரு சாமி, 2 சாமி… 6 சாமி..” என்ற வசனமும், “நா போலீஸ் இல்ல.. பொறுக்கி..” என்ற வசனமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க திருநெல்வேலி பகுதியில் முக்கியமாக விளங்கும், ஜங்சன், அல்வா கடை, இரயில் நிலையம், பேருந்து நிலையம், காவல்நிலையம், ஜெயில், தாமிரபரணி நதி என ஒட்டுமொத்த பகுதிகளிலும் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் அறிமுக பாடலான “திருநெல்வேலி அல்வா டா..” என்ற பாடல் ஒட்டுமொத்த திருநெல்வேலியின் சிறப்பம்சங்களை குறிக்கும். இந்த பாடல் வரிகள் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வரிகளில் எழுதப்பட்டது. இந்த பாடலுக்காக நா.முத்துக்குமார் சுமார் 2 நாட்களுக்கு மேலாக திருநெல்வேலியில் தங்கியிருந்து இங்கிருந்த முக்கிய விஷயங்களை அறிந்து எழுதியுள்ளார். இந்த பாடலும் செம ஹிட் ஆனது.

இந்த நிலையில் இந்த பாடலில் இடம்பெறும் “பாளையங்..கோட்டையில்.. ஜெயிலு பக்கம் இரயிலு கூவும்…” என்ற வரிகளை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்து, அது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு டேக் செய்துள்ளார்.

இதையும் கவனியுங்கள்: “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் இணைகிறார் நடிகை பிரியங்கா மோகன்

இதனை கண்ட ஹாரிஸ் ஜெயராஜ் அவருக்கு திருப்பி பதிலளித்துள்ளார். அதில் “தனக்கு இதுநாள் வரை இதற்கு அர்த்தம் தெரியாது. நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது போன்ற சினிமா சார்ந்த செய்திகள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், உடல்நலம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here