Curry Leaves Benefits: கருவேப்பிலையும் அதன் நன்மைகளும்: நாம் அன்றாடம் எந்த ஓரு சமையல் செய்தாலும் கடுகு கலப்பு தாளித்து செய்து வருவது காலகாலமாக இருந்து வரும் பழக்கமுறைகளில் ஓன்றாக இருக்கிறது. அப்போது கருவேப்பிலையையும் சேர்த்து தாளிப்பு செய்து வருவதும் அனைவரின் வழக்கம் அப்படி நாம் பயன்படுத்தும் கருவேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஓளிந்து இருக்கிறது.
ஓருசிலர் இக்கருவேப்பிலையை தினியாக ஓதுக்கி வைத்து விடுவதும் உண்டு. அப்படி தனியாக ஓதுக்கி சாப்பிடாமல் இருந்தால் அதனை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பல நன்மைகளை நமக்கு தெரியாமலே இயற்கையாக அந்த கருவேப்பிலை மூலம் நாம் நன்மை அடைகிறோம் என்பதில் துலியும் ஐயமில்லை. அப்படி பல நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட கருவேப்பிலையின் நன்மைகளை இப்பதிவில் அறியலாம்.
இதையும் அறிந்து கொள்க: வாழைப்பழ வகைகள் மற்றும் அதன் நன்மைகளும்

கருவேப்பிலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.
நம்மில் பலர் கருவேப்பிலையை வெறும் வாசணைக்காக பயன்படுத்துவதாக நினைப்பர். உண்மையில் அது வெறும் வாசணை பொருள் மட்டும் அன்று. கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின்-ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
நன்மைகள்:
- கருவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
- கல்லீரலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.
- கருவேப்பிலை உண்பதால் செறிமாணக் கோளாறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
- மோர், தயிர் போன்றவற்றில் கலந்துள்ள கருவேப்பிலையை அருந்துவது மூலம் இரத்த சோகையை குணப்படுத்துகின்றது.
- வயிற்றுவலியை சரிசெய்கிறது. மேலும், மலச்சிக்கல், அமிலதன்மை போன்றவற்றை நீக்குகிறது.
- உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது தினமும் தூளசியுடன் இந்த கருவேப்பிலை இலையையும் சேர்த்து சாப்பிட்டு வர கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
- வைட்டமின் A இருப்பதால் கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
- கறிவேப்பிலையில் இருக்கும் `கார்பஸோல்’ (Carbazole) ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து உடலுக்குள் நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
- நார்ச்சத்துகள் நிறைய இருப்பதால் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
- கறிவேப்பிலையை தீக்காயங்கள், சொறி மற்றும் பூச்சிக் கடி போன்ற காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.
- இது சருமத்தை மீள் தன்மையுடனும், இளமையாக வைக்கவும் உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சினையில் இருந்து காக்கிறது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
- கறிவேப்பிலை மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது அல்சைமர் நோய் போன்ற மறதி நோயை தடுக்கிறது.
- கறிவேப்பிலையில் குளுதாதயோன் பெராக்சிடேஸ், குளுதாதயோன் ரிடக்டேஸ் மற்றும் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் போன்ற மூளையை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
இது போன்ற பல நல்ல மருத்துவ குணங்களை பெற்று இருப்பதால் இந்த கருவேப்பிலையை நாம் மறந்து கூட உண்ணும் போது தனியாக எடுத்து அதை தவிர்த்து உண்பதை தவிர்த்து அதனையும் உணவில் சேர்த்து சாப்பிடுவது நம் உடல்நலத்தை பாதுகாக்க உதவும்.
இன்று வளர்ந்து வரும் நவீன காலத்தில் இயற்கையை ஆதரித்து அதன் பயனை பெற்று நமக்கு வரும் சங்கதிகளுக்கும் சொல்லி வளமான ஆரோக்கியமான உடலை பேணுவோம்.
இது போன்ற தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், பழமொழி, தமிழ் இலக்கியங்கள், செய்திகள், சினிமா தகவல்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.