வெண்டைக்காயின் நன்மைகளும் வெண்டைக்காய் தோசை செய்முறையும்: நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவில் பல்வேறு வகையான காய்கறிகளை சேர்த்து கொண்டு அதை உண்பதால் பலவித நன்மைகளை நம் உடலானது பெறுகிறது. இயற்கையாக விளையும் காய்கறிகளில் எண்ணற்ற சத்துகளும் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கி உள்ளது.
நாம் இட்லி, தோசை என ஓரே மாதிரியான உணவினை உட்கொள்வதால் நமக்கு ஓரு வித எரிச்சல் ஏற்பட்டு விடும். அதுபோல உணர்வு ஏற்பாடாத வகையில் உணவில் சில மாற்றங்களை செய்து வந்தால் மனமும் உடலும் ஓருங்கிணைந்து உடல் வலுபெறும். அந்த வகையில் வெண்டைக்காயை பலவிதங்களில் சமைத்து ஆரோக்கியமான உடலை பேணுங்கள்.
இதையும் செய்து பாருங்கள்: மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையில் தோசை செய்யும் முறை

வெண்டைக்காயில் புளிக்குழம்பு, பருப்பு குழம்பு, பொரியல், நன்றாக வருத்த வெண்டைக்காய் பொரியல், மசாலா அரைத்த வெண்டைக்காய் துவையல், வெண்டைக்காய் தோசை, வெண்டைக்காய் சட்னி, என விதவிதமாக செய்து உண்டு வாருங்கள். இப்படி அன்றாட வாழ்வில் ஓன்றாக திகழும் வெண்டைக்காயில் உள்ள நன்மைகளையும் வெண்டைக்காய் தோசை செய்யும் முறைகளையும் இப்பதிவில் அறியலாம்.
வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்:
வெண்டைக்காயில் கால்சியம் சி, கால்சியம் கே, புரோட்டீன்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்தும் ஊட்டச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- மூளை சுறுப்புடன் இயங்க வெண்டைக்காயை உணவில் அதிகம் சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
- வெண்டைக்காயை அதிகமாக பயன்படுத்தி வந்தால் ஞாபகமறதி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
- நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு மூன்று முறையேனும் வெண்டைக்காயை உண்பது நல்லது. சர்க்கரையை கட்டுப்படுத்தும் சக்தி இந்த காய்க்கு இருக்கிறது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்டைக்காயை விரும்பி அடிக்கடி உண்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைகளிலிருந்து விடுபட வெண்டைக்காயை அதிகமாக பயன்படுத்தி பலனை பெறலாம்.
- கல்லீரல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது.
- வெண்டைக்காய் அதிகம் எடுத்து கொள்வதால் மூட்டு பிரச்சனைகள் குணமாகும். வயதானவர்களுக்கு சிறந்த மருந்தாக காணப்படுகிறது.
- கொளஸ்ட்ரால் அளவை சரிசமாக நிலை நிறுத்தும் தன்மையை வெண்டைக்காய் பெற்றிருக்கிறது.
- உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்தவையாக இருக்கிறது. உடல் எடையை குறைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது.
இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகிறது. நம் முன்னோர்கள் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டால் மூளை வளர்ச்சி பெறும் ஞாபகமறதி வராது என சொல்வதுண்டு. இப்படி பலவித நன்மைகளை அள்ளி தரும் வெண்டைக்காயை அனைவரும் உணவில் சேர்த்து உண்டு பயன்பெறுவோம்.
வெண்டைக்காய் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 200கி, வெந்தயம் – 1 ஸ்பூன், வெண்டைக்காய் – 10, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 மேஜை கரண்டி, கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சரிசி மாவு – 3 ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் புழுங்கல் அரிசியை நன்கு சுத்தம் செய்து, வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, அதில் பொடியாக நறுக்கிய 10 வெண்டைக்காய், பச்சை மிளகாய் ஒன்றை போட்டு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு போல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வானலை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன் சேர்த்து இதனுடன் வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது இதை அந்த மாவுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக இதனுடன் பச்சரிசி மாவு 3 ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். பச்சரிசி மாவு சேர்ப்பதால் மொறு மொறுப்பாக இருக்கும். அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடு ஏறியதும் மாவை தெளிப்பது போன்று தோசையை ஊற்றி வார்த்து எடுக்கலாம். அவ்வளவு தான் சூப்பரான மொறு மொறு வெண்டைக்காய் தோசை தயார்.
இது போன்ற உடல்நலம் சார்ந்த சமையல், ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து வகையான தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.