வெள்ளை பூசணிக்காயின் நன்மைகள்: இயற்கையாகவே இந்தியர்கள் சாப்பிடும் உணவு முறைகளில் நம்மை அறியாமலே பல நன்மைகளும் ஆரோக்கியமும் அடங்கி இருக்கிறது. பலவித காய்கறிகளில் பல எண்ணற்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. நாம் வெகுவாக இயற்கை முறையில் விளையும் காய்கறிகளையே அன்றாடம் உணவில் சமைத்து சாப்பிட்டு வருகிறோம்.
அப்படி இயற்கை முறையில் உருவாகும் அதிலும் நாட்டு காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. பல நோய் எதிர்ப்பு சக்தியாக நாட்டு காய்கறிகள் உள்ளது எனில் மிகையாகாது. அந்த வகையில் வெள்ளை பூசணிக்காய்களில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகளை இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் இந்த காயானது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும், வெயில் காலமான கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நீர்சத்து குறைந்து காணப்படும். எனவே அந்த கோடை காலத்தில் இது போன்ற பூசனிக்காயை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நீர்சத்து மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
இதையும் கவனியுங்கள்: Curry Leaves Benefits: கருவேப்பிலையும் அதன் நன்மைகளும்

இது போன்ற காலங்களில் நீர்சத்து அதிகம் உள்ள முள்ளங்கி, வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. நோயை எதிர்த்து போராடுவதால் சீனர்கள் இந்த பூசணிக்காயை அதிகம் பயன்படுத்துவர்.
வெள்ளை பூசணியில் உள்ள சத்துகள்:
இதில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் ஏ, பி 6, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்களும் உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, ஃபோலேட், நியாசின், தயமின், கரோட்டீன்கள், லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
வெள்ளை பூசணியின் நன்மைகள்:
- வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கல்லீரலில் ஏற்படும் வெப்பம் குறைந்து நன்மை பயக்கும்.
- வயற்று வலி, நெஞ்சு எரிச்சல் குணமடையும்.
- வையிட்டமின் டி குறைப்பாடு உள்ளவர்கள் வெள்ளை பூசணி சாறு குடிப்பதன் மூலம் வையிட்டமின் டி கிடைக்கிறது.
- சிறுநீரகத்தில் கற்கல் இருப்பவர் வெள்ளை பூசணி சாற்றினை காலை மாலை என இரு வேலையும் குடித்து வர கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்து விடும்.
- வயிறு மற்றும் குடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அகற்ற உதவுகிறது. இது இரைப்பை குடல் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
- உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் 96 சதவீதம் நீர் சத்து மட்டுமே உள்ளது.
- வெள்ளை பூசணிக்காயில் அதிகளவு பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இந்த சேர்மங்கள் கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான நிலைக்கு மாற்றவும் மற்றும் இயல்பாக்கவும் உதவுகிறது.
- உடலில் உள்ள புற்றுநோய்க்கு எதிராகவும் போராடுகிறது.
- இதில் காணப்படும் அமிலோ அமிலம் நம் உடலை மகிழ்ச்சியாகவும் சோர்வின்றி நம்மை செயல்படவும் வைக்கிறது.
- வெள்ளை பூசணிக்காயில் ஏராளமான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளது. இவை கண்களை ப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து காக்கிறது. கண்புரை, மாகுலர் சிதைவு மற்றும் ஆஸ்டிஜிமாடிசம் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
- வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுவதால் கண் பிரச்சனைகளுக்கு நிறந்தர தீர்வாக இருக்கிறது.
பூசணிக்காய்களில் மஞ்சள் பூசணி, சாம்பல் பூசணி, வெள்ளை பூசணி என வகைகள் உள்ளன. இவை அனைத்தும் ஓரே அளவில் பல நன்மைகளை தருகிறது. அதிலும் வெள்ளை பூசணியில் அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் உடலுக்கு பலவிதங்களில் ஆரோக்கியத்தை நல்குகிறது. இது போன்ற சத்துக்களை அதிகமாக உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மையை சேர்ப்போம்.
இது போன்ற செய்திகளையும் ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், விளையாட்டு, உடல்நலம், சமையல், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.