நயன் விக்கி தம்பதி விதிமுறை மீறவில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு

0
16

நயன் விக்கி தம்பதி விதிமுறை மீறவில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.

நடிகை நயன்தாரா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். லேடி சூப்பர் ஸ்டாராகவும் மக்களால் வர்ணிக்கப்படுபவர். இவர் இந்தாண்டு ஜூலை மாதத்தில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வுகளை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஓப்பந்தம் செய்து அதனை நடத்தியது. மேலும், இந்த திருமண நிகழ்வுகளை ஓடிடியில் ஓளிப்பரப்பவும் திட்டமிட்டு இருக்கின்றது.

விக்கியும் நயனும் பல நாடுகளுக்கு ஹனிமூன் சென்று திருமண பந்தத்தை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எதிர்ப்புக்கு உள்ளானார். இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். விதிகள் மீறப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நயன் விக்கி தம்பதி விதிமுறை மீறவில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு

இதனை விசாரித்த அரசு இவர்கள் விதிகள் மீறி எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். 11.03.2016 ஆம் ஆண்டு சட்டப்படி இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். அதற்கான சான்றிதழ்களை அவர்கள் காண்பித்தனர். ஐசிஎம்ஆர் செயற்கை கருதரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகளை பெற்றுள்ளனர்.

2021ம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஓப்பந்தம் போடப்பட்டு, அதே மாதத்தில் வாடகைத்தாயின் வயிற்றில் கருமுட்டை செலுத்தப்பட்டுள்ளது. பல விசாரணைகளின் படி இவர்கள் நடைபெற்றுள்ளனர். ஆதலால் இவர்கள் விதிமீறல்களில் ஈடுப்படவில்லை.

இந்நிலையில், தீபாவளி அன்று நயன்தாரா விக்னேஷ்சிவன் இருவரும் குழந்தைகளுடன் நின்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன விடியோ வைராலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here