உறங்கும் போது பலர் குறட்டை விடும் சத்ததால் நிம்மதியை இழப்பர் அதை பலர் நகைச்சுவையாக கேளியும் செய்வர் பலருக்கு இந்த செயல் துன்பத்தை தரலாம். இந்த குறட்டையை குறைக்க சில ஆலோசனைகளை இப்பதிவில் காணலாம்.
குறட்டை விடுவது இயல்பான ஓன்றாக இருந்தாலும் அருகில் இருக்கும் நபர்களுக்கு அந்த சத்தம் மிக தொந்தரவை தரலாம். இயல்பானது என்று கருதினாலும் அதில் உள்ள பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெறுவது அவசியம்.
பெண்களை விட ஆண்களுக்குகே இந்த குறட்டை விடும் பிரச்சனை இருக்கின்றது. தினமும் குறட்டை விடும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும். அதிலும் குறட்டை சத்ததில் மாறுபாடுகள் ஏற்படுமானால் உடனே மருத்துவரை சந்தித்தல் நலம்.

குறட்டை எதனால் உண்டாகிறது?
உறங்கும் போது மூச்சு வழியாக விடப்படும் காற்றானது தடைப்பட்டு வாயின் வழியாக காற்றை சுவாசிக்கும் அப்போது திசுக்களால் தடை செய்யப்படுவதால் குறட்டை ஏற்படுகிறது. உறங்கும் போது நம் நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைந்து விடும் அப்போது சுவாசப்பாதையில் வழியே செல்லும் காற்றானது திசுக்களால் தடைப்படும் அதனால் குறட்டை ஏற்பட்டு உடன் இருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
குறட்டை விடுவது எதன் அறிகுறி:
உறக்கத்தின் போது ஏற்படும் குறட்டை பிரச்சனை சாதாரணமான பிரச்சனையாக இருந்த போதிலும் அதில் கவனம் கொண்டு சரி செய்வது முக்கியமானது. எப்போதாவது வரும் குறட்டை பிரச்சனையாக இருப்பதில்லை ஆனால், தினமும் குறட்டையின் சத்தம் அதிகரித்தாலும் குறட்டை விடும் போது ஏற்படும் அசோகரியம் காணப்பட்டாலும் அதை கூர்ந்து கவனித்து அதற்கு தீர்வு காண்பது நல்லது.
மருத்துவத் துறையினர் இதனை பற்றி கூறும் போது, ஓழுங்கற்ற சுவாசத்துடன் ஏற்படும் குறட்டையினால் இதயம் சார்ந்த நோய்க்கு அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும், மூச்சுத் திணறல் குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் கவனமாக இருக்கவும்.
குறட்டைக்கான காரணங்கள்:
உடல் எடை அதிகரித்து காணப்படுவதும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், தொண்டை பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இது போன்ற குறட்டை பிரச்சனைகள் ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனை, முக்கடைப்பு, மது பழக்கம் உடையவர்களுக்கு, புகைப்படிப்பவர்களுக்கு என அனைவருக்கும் இது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
உடல் எடை அதிகரிப்பவர்களுக்கு தொண்டையில் கொழுப்பு அப்படியே தங்கி இருக்கும் அது சுவாசப்பாதையின் அளவை குறைத்து விடும்.
குறட்டையை குறைப்பதற்கான சில அறிவுரைகள்:
உடல் எடையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம். உடல் எடை அதிகரிப்பவர்களுக்கு தொண்டையில் கொழுப்பு அப்படியே தங்கி இருக்கும் அது சுவாசப்பாதையின் அளவை குறைத்து விடும்.
நிமிர்ந்தவாறு உறங்கும் போது அதிகப்படியான குறட்டை ஏற்படும். ஆதலால், படுக்கும் போதே ஓரு பக்கமாக படுத்தல் மேலும், குப்புறப்படுத்து உறங்குதல் மூலம் குறட்டை விடுவதிலிருந்து விடுபடலாம்.
மதுப் பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கத்தை குறைத்து முற்றிலுமாக விலகினாலும் இந்த குறட்டை வருவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தினமும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மற்றும் நடை பயணம் மேற்கொண்டு உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைக்கலாம் அதன் மூலமும் குறட்டை விடுவது குறையும்.
இதையும் அறிந்து கொள்ளுங்கள்: குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்
ஆசணங்கள் மூலமும் பல நல்ல பலனை அறியலாம். குறட்டை குறைய விடுபட தனுசாசனம், புஜங்காசனம், பிராணாயாமம் போன்ற ஆசணங்களை முறையாக செய்வதாலும் குறட்டையிலிருந்து விடுப்படலாம்.
இது போன்ற உடற்பயிற்சி ஆசணங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல முடிவு கிடைக்கும் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க, இதய நலன் உள்ளிட்டவற்றிற்கு உதவும்.
இது போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.