பெண்கள் தலை முதல் கால் வரை அணியும் ஒவ்வொரு நகைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ பலன் உண்டு. ஒவ்வொரு நகைக்கும் என்னென்ன மருத்துவ பலன்கள் என்பதை காணலாம்.
பொட்டு
பொட்டு வைக்கும்போது நெற்றிப்பொட்டு அவ்வப்போது அழுத்தப்படுவதால் உடலின் வெப்பம் தணியும். நினைவாற்றல், உடலின் சக்தி தேவையின்றி வெளியேறுவதை தடுக்கும். மேலும் எதிர்மறை எண்ணங்கள், தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.
தோடு
மூளையின் செயல்திறன் அதிகரிக்க உதவும். கண்பார்வைத் திறன் கூடும்.
நெற்றிச்சுட்டி
நெற்றிச்சுட்டி அணிவதால் தலைவலி, சைனஸ் பிரச்சினைகள் சரியாகிறது.
மோதிரம்
ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்கான புள்ளிகள் மோதிரவிரலில் இருப்பதால் மோதிரங்கள் சம்பந்தப்பட்ட உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவும். மேலும் ஒவ்வொரு விரலில் போடப்படும் ஒவ்வொரு மோதிரமும் உடலின் பல்வேறு இயக்கநிலைக்கு உதவும்.
பிரேஸ்லட், கைக்கடிகாரம், காப்பு, கைக்கயிறு
இவைகளை மணிக்கட்டில் அணிவதால் பாலுறுப்பின் புள்ளிகள் தூண்டப்பட்டு சீராக செயல்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராகி பதற்றம், படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்கப் படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.
செயின், நெக்லஸ்
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். மேலும் இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு கழுத்தணிகள் உதவுகின்றன.
வளையல்
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணுக்களின் உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன் சுரப்பும் சீர் செய்யப்படுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம்
ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும். மேலும் இடைப்பகுதியில் எப்போதும் ஒரு சிறு செயின் அல்லது அரைஞாண் கயிறு கட்டுவது பெண்களுக்கு தேவையில்லாத இடைக்கொழுப்புப் பிரச்சினை வராமல் தடுக்கும். அளவுக்கதிகமாக சாப்பிடுவது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மூக்குத்தி
மூக்கில் உள்ள சில நாடிப்புள்ளிகளுக்கும் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதால் மூக்குத்தி அவ்வுறுப்புகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும்.
கொலுசு
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்க பிரச்சினையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தடுக்கலாம்.
மெட்டி
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் இனப்பெருக்க ஹார்மோன்களை தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணிவது. இதை அணியும் போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்புக்கு உதவும்.