பாலைவனம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள சாம் மணல் குன்று பகுதிகளுக்கு செல்ல ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், தனியார் நிறுவனமும் சேர்ந்து சோதனை முயற்சியாக ராஜஸ்தான் பாலைவனத்தில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது. ஜெய்சல்மாரில் உள்ள சாம்தானி பகுதியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் இயக்கப்படும்.
ஜெய்சல்மாரில் உள்ள பாலைவனப்பகுதிகளில் உள்ள மணல் குன்றுகள் மேல் ஹெலிகாப்டர் பறந்து செல்லும். இதில் 5 நிமிடங்கள் பறக்க ரூ.7 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 15 நிமிடங்கள் பறந்து செல்லும் பேக்கேஜும் உண்டு. தினமும் 200 சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் பயணிக்கலாம்.
இதுபற்றி ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் கூறும்போது, ஜெய்சல்மாரில் இருந்து சோதனை அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சேவை பின்னர் ராஜஸ்தானின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.