பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ளும் நபர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தமிழகத் தொலைக்காட்சி தொடரில் அனைத்து வித ரசிகர்களையும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி தான் என்றால் மிகையாகாது. அதைபோலவே பிக்பாஸ் தொடரும் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது.
பிக்பாஸ் தொடரை இதுவரை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 ல் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருந்த நிலையில், சீசன் இறுதியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 ல் பங்கு பெற போகும் போட்டியாளர்கள் யார் என தெரியவந்துள்ளது.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் கோமாளி புகழ் மற்றும் காரக்குழம்பு கனி, பவித்ரா லஷ்மி என மூவரும் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர். அது போல் சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான அசீம் கான் கலந்து கொள்வதாகவும் ஒரு தகவல் வெளியானது. மேலும் இவர் சீசன் 4 -இல் வைல்கார்டில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது
பிபி ஜோடிகள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நகுல் கலந்து கொள்ளுவதாக தெரிகிறது. அது போல் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின், ஷகிலா மகள் மிலா உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் கடந்த சீசன்களில் போட்டியாளராக இருந்த ஆண் மாடலின் நண்பர் ஒருவரும் கலந்து கொள்வார் என தெரிகிறது. இவர் பாலாஜி முருகதாஸின் நண்பர் முகேஷ் ரவியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது போல் குக் வித் கோமாளி புகழ், சார்பட்டா பரம்பரையில நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் அல்லது நவம்பரில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை தொகுக்க உலக நாயகன் தான் வருவார் என தெரிகிறது.