இறைவன்: ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இது தற்பாேது வைரலாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.