பன்னீர் பட்டர் மசாலாவிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி என இணையத்தில் வைரலாகும் கேள்வி

0
21

பன்னீர் பட்டர் மசாலாவிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி என இணையத்தில் வைரலாகும் கேள்வியை பன்னீர் பட்டர் மசாலாப் பிரியர்கள் டிரன்ட் செய்து வருகின்றனர்.

பல்வேறு துரித உணவுகள் தான் நமது உணவு முறைகளாக ஆகிவிட்டது. ஆரோக்கியம் என்ற பெயரை மறந்து, நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதனால் புரதச்சத்துக்கள் கிடைப்பதில்லை, ஆனால் இந்த பன்னீர் நிறைய ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பன்னீர் உடலுக்கு புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.

பன்னீர் ஒரு சைவ உணவென்றாலும், அது சாப்பிட இறைச்சி போலிருப்பதால் அசைவ பிரியர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளது.
பன்னீர் பட்டர் மசாலாவிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி என இணையத்தில் வைரலாகும் கேள்வி
மத்திய அரசு பால், தயிர், பன்னீர் என பேக்கிங்கில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கு GST 5 % வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தது. இதன் காரணமாக சாதரண மக்கள் எப்போதாவது சென்று விரும்பிய உணவை உட்கொள்வதும் கடினமாகிறது. விலை ஏற்றத்தால் அதிலும் விரும்பி உண்ணும் பன்னீர் பட்டர் மசாலாவை மிஸ் செய்வதாக இணைய தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்த தகவலைப் பற்றி அறிந்ததும் பனீர் பட்டர் மசாலாவில் மீம்ஸ் செய்யத் தொடங்கினார். உணவுப் பொருட்களின் விலை உயர்வு அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

உணவுப் பொருட்களைத் தவிர, அரசாங்கத்தின் வரி விதிப்பும் மருத்துவமனை கட்டணங்கள் உயர வழிவகுக்கும். 5,000 ரூபாய்க்கு மேல் வாடகை உள்ள மருத்துவமனை அறைகளுக்கு வாடிக்கையாளர்கள் 5 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும்.

இந்த தகவலால் சமூக வலைதளவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மருத்துவக் கட்டணங்கள் தங்களுக்குச் சுமையாக இருப்பதாகவும், ஜிஎஸ்டி அதிகரிப்பால் மலிவு விலை சிகிச்சை தங்களின் கையை விட்டு நழுவிப் போகும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here