ஹீரோ ஹாண்டா ஸ்பிளன்டர் ப்ளஸ் பைக்கை இனி எலக்ட்ரிக் பைக்காக எவரும் மாற்றி கொள்ள முடியும். பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதால் மத்திய அரசும் எலக்ட்ரிக் மற்றும் சோலார் பைக்குகளை அதிகம் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் முதன்மையானதாக உள்ளது. ஸ்ப்ளன்டர் ப்ளஸ் பைக்குகள் தான் ஏன்னெனில், நடுத்தர மக்களின் நாயகனாகவும் மற்ற பைக்குகளை காட்டிலும் விலையும் குறைவாகவும் மேலும் பெட்ரோல் மைலேஜிக்கு ஏற்றதாகவும் இருக்க கூடியது.
தற்போதும் ஸ்பிளன்டர் பைக்குக்கு மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் அதனை எலக்ட்ரிக் பைக்காக மாற்ற ஆய்வுகளை நடத்தி தற்போது அதற்கான கிட் ஓன்றை பொருத்தி பயன்படுத்த அனுமதியை வாங்கியுள்ளது.

காலசூழலுக்கு ஏற்பவும் பெட்ரோல் விலை ஏற்றம், இயற்கை பாதிப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியாவின் மும்பையை சேர்ந்த நிறுவனமான கோகோ ஏ1 (GOGO A1) ஹீரோ ஸ்பிளன்டர் பைக்கை எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் (Electric Conversion Kit) ஒன்றை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோகோ ஏ1 நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டிற்கு ஏற்கனவே ஆர்டிஓ (RTO) அனுமதி கிடைத்து விட்டது.
கோகோ ஏ1 கிட் உடன் 2 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரி ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், டிசி டிசி கன்வெர்ட்டர், புது அக்செல்லரேட்டர் வயரிங், கீ ஸ்விட்ச் மற்றும் கண்ட்ரோலர் பாக்ஸ் மற்றும் புதிய ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது அராய் (ARAI – Automotive Research Association of India) அமைப்பின் அனுமதியையும் இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் பெற்றுள்ளது. உங்கள் ஹீரோ ஸ்பிளெண்ட் பைக்கிற்கு இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டை நீங்கள் பொருத்த விரும்பினால், அந்த நிறுவனத்தின் ஒர்க் ஷாப்பிற்கு உங்கள் பைக்கை கொண்டு செல்ல வேண்டும்.
அப்படி உங்கள் பைக்கினை மாற்ற விரும்பினால் RTO விடம் மறுபதிவு பெற்று வர வேண்டும். மறுபதிவு செய்வதால் பழைய நம்பர் மாறாது அதே நம்பர் ப்ளேட் தான் எலக்ட்ரிக் வண்டி என்பதற்கான பதிவும் நம்பர் ப்ளேட் பச்சை நிறத்திலும் மாற்றப்படும். 1997 ஆம் ஆண்டு ஸ்பிளண்டர் ப்ளஸ் பைக்குகளிலும் எலக்டிரிக் கிட் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டின் விலை 35 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேட்டரியுடன் கூடிய விலை 95 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 151 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கிறது.