இந்தி நடிகை கஜோல் மகள் நைசா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்

0
9

கஜோல்: இந்தியில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். சாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர். தமிழில் அவர் மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பெரும் பலமாக அமைைந்தது.அப்படத்தின் அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. இவர் பின்னர் இந்தி நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகள் நைசா வெளிநாட்டில் படிப்பை முடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திடீரென்று இவரது தோற்றத்தில் இரசிகர்கள் மாற்றத்தை கண்டனர்.

kajol daughter nysa doing plastic surg

குறிப்பாக அவரது மூக்கும், உதடுகளும் மாறியிருந்தது. இதனையடுத்து அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதை அவரது அம்மா கஜோலும் உறுதி செய்துள்ளார். தனது மூக்கு சரியில்லை என்று நைசா நினைத்துள்ளார். இதற்காக ஆபரேஷன் செய்து கொள்ள ஆசைப்பட்டு கடந்த மாதம் அமெரிக்கா சென்ற அவர் மூக்கிற்கும், உதடுகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார். விரைவில் நைசா சினிமாவில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக கஜோல் தமிழில் தனஷுடன் விஐபி 2 படத்தில் நடித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here