நயன்தாரா: மும்பையில் இருந்து சென்னைக்கு திடீரென்று வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேற்று முன்தினம் இரவு சென்னையிலுள்ள நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்றார். ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்று 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த படம் ‘பதான்’. இதையடுத்து ஷாருக்கான் நடிக்கும் படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கும் இதில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி, காமெடி வேடத்தில் யோகிபாபு நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு திடீரென்று வந்த ஷாருக்கான் சென்னையிலுள்ள நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் வீட்டுக்கு சென்றார். நயன்தாராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அக்குழந்தைகளை பார்க்க நயன்தாராவின் வீட்டுக்கு ஷாருக்கான் வந்திருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். பிறகு அவரகளைப் பார்த்து கையசைத்தபடியே காரில் சென்றார் ஷாருக்கான்.