இந்தி ஓற்றுமை என்னும் கயிற்றால் நாட்டை இணைக்கிறது-அமித்ஷா

0
11

இந்தி ஓற்றுமை என்னும் கயிற்றால் நாட்டை இணைக்கிறது அலுவல் மொழியாக இந்தி உள்ள நிலையில் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அலுவல் மொழியான இந்தி, ஓற்றுமை என்னும் கயிற்றால் நாட்டை இணைக்கிறது. இந்தியாவில் உள்ள இதர மொழிகளுடன் நட்புடன் திகழ்கிறது. நரேந்திர மோதி அரசாங்கம் இந்தியுடன் சேர்த்து அனைத்து உள்ளூர் மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடுபடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தி ஓற்றுமை என்னும் கயிற்றால் நாட்டை இணைக்கிறது-அமித்ஷா

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஹிந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்பு பெருமை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வு திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய் மொழியாக உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தி, இது தேவானகிரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தி ஒரு மொழி மட்டுமல்ல, 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் தேசிய அடையாளமாகும். ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் மாண்டரின் மொழிகளுக்குப் பிறகு உலகில் நான்காவது இடத்தில் ஹிந்தி மொழி உள்ளது.

செப்டம்பர் 14, 1950 அன்று இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மாறியது. அரசியலமைப்பின் 343 வது பிரிவின் படி, “யூனியனின் அதிகாரப்பூர்வ மொழி தேவநாகரி எழுத்தில் இந்தி இருக்க வேண்டும்”. அப்போதிருந்து, இந்தியாவில் செப்டம்பர் 14 இந்தி திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here